ஜப்பானில் நவம்பர் 18-ம் தேதி வெளியாகும் விஜய்யின் திரைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்..!

கடந்த ஆண்டு விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்..!

ஜப்பானில் நவம்பர் 18-ம் தேதி வெளியாகும் விஜய்யின் திரைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்..!

வருடத்திற்கு ஒரு படம்:

கடந்தாண்டு விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். 
வருடத்திற்கு ஒரு படம் வீதம் விஜய் நடித்து வருவதால், ஒவ்வொரு வருடமும் அவருடைய படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படும்.

மாஸ்டர்: 

அப்படி கடந்தாண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தாலும், விமர்சன ரீதியாக சற்று பின்னடைவை சந்தித்தது எனலாம். ஆனாலும் படத்திலிருந்து பாடல்கள் மற்றும் பிஜிஎம் ஆகியவை இன்றும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் இணைந்து விட்டது எனலாம். 

கலவையான விமர்சனம்:

வாத்தி கம்மிங் பாடலில் ஒரே ஒரு வரியில் பாடலையே முடித்திருப்பார் இசையமைப்பாளர் அனிரூத்.  சமுதாயத்தில் இப்படியெல்லாம் நடைபெறுமா என தோன்ற வைக்கும் படியான கதை தான் என்றாலும், விஜய்க்காக சேர்க்கப்பட்ட மாஸான சீன்கள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

வில்லனாக மிரட்டிய விஜய்சேதுபதி: 

விஜய்யை காட்டிலும் வில்லனாக நடித்திருந்த விஜய்சேதுபதி ஸ்கோர் செய்து தன்னை வில்லனாகவும் நிரூபித்துக் காண்பித்திருந்தார். தமிழ்நாட்டை தாண்டி பிற மொழிகளிலும் படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ஜப்பானில் வெளியாகும் மாஸ்டர்: 

பெரும்பாலும் தமிழ் படங்கள் வெளி மாநிலங்களை தாண்டி வெளிநாடுகளிலும் வரவேற்பை பெறுவதுண்டு. அந்த 
வகையில் ஜப்பானில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரும் நவம்பர் 18-ம் தேதி திரையிடப்படவுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.