எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... தர்ஷனின் வைரல் புகைப்படம்

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... தர்ஷனின் வைரல் புகைப்படம்


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் தர்ஷன். கூகுள் குட்டப்பன் எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிக்பாஸ் உடன் இணைந்து பணியாற்றிய லாஸ்லியா இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இப்படத்தின் மூலம் இவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தர்ஷன் எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். மேலும் உடற்பயிற்சி செய்வதிலும் அதிக கவனம் செலுத்துவர். 

தர்ஷன் அவரது சமூகவலைத்தள பக்கத்தில் 8 கிலோ உடல் எடையை குறைத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது  அந்த புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது.