லத்தி படப்பிடிப்பில் விஷாலுக்கு ஏற்பட்ட காயம்..! இரண்டாம் முறையாக மீண்டும் படப்பிடிப்பு ஒத்தி வைப்பு..!

காலில் ஏற்பட்ட காயத்திற்கு பிசியோதெரப்பி சிகிச்சை அளிக்கப்படுகிறதாம்..!

லத்தி படப்பிடிப்பில் விஷாலுக்கு ஏற்பட்ட காயம்..! இரண்டாம் முறையாக மீண்டும் படப்பிடிப்பு ஒத்தி வைப்பு..!

லத்தி படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு ஏற்பட்ட காயத்தால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் வினோத் இயக்கத்தில் விஷால், சுனைனா ஆகியோர் நடிப்பில் பான் இந்தியா  படமாக உருவாகி வருகிறது லத்தி. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வருகின்றனர்.

ஜனவரியில் முதல் காயம்..

ஜனவரியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, விஷாலுக்கு ஏற்பட்ட காயத்தால் பாதியில் நிறுத்தப்பட்டது. பிறகு விஷால் கேரளாவிற்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டார். சிகிச்சை முடிந்து மீண்டும் லத்தி படத்தின் படப்பிடிப்பில் முழுவீச்சில் இறங்கினார் விஷால். படத்திற்கான சண்டை காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. விரைவாக படத்தை முடித்து வெளியிட வேண்டும் என படக்குழுவினர் இரவு பகலாக வேலைப் பார்த்து வந்துள்ளனர். அப்படி நடைபெற்ற சண்டை காட்சியின் போது, எதிர்பாராத விதமாக விஷாலுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. வலியால் துடிதுடித்த விஷாலுக்கு படப்பிடிப்பு தளத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் படப்பிடிப்பு ஒத்திவைப்பு..

அதன் பிறகு மருத்துவரிடம் பரிசோதித்த போது, எலும்பு முறிவு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. எனினும் சில நாட்கள் பிசியோதெரப்பி எடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியதால், லத்தி படப்பிடிப்பு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.