நாங்களும் கோர்ட்க்கு போவோம்.. வழக்கு தொடுப்போம்.. ஜெயலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு..!

சினேகன் மீது புகார் அளித்திருந்தார் ஜெயலட்சுமி, அதனடிப்படையில் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..!

நாங்களும் கோர்ட்க்கு போவோம்.. வழக்கு தொடுப்போம்.. ஜெயலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு..!

சமரசம் பேசிய போலீசார்:

சினேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது என பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி மற்றும் திரைப்பட பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் மாறி மாறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

சினேகன் மீது ஜெயலட்சுமி புகார்:

ஆனால் தனது பவுண்டேஷன் பெயரில் நடிகை ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபட்டதாக பாடலாடசிரியர் சினேகன் தெரிவித்ததை கண்டிக்கும் விதமாக பாடலாசிரியர் சினேகன் மீது மீண்டும் ஜெயலட்சுமி  காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்கும் தொடர்ந்தார். 

சினேகன் மீது வழக்குப்பதிவு:

சினேகன் மீது அவதூறு வழக்குபதிவு செய்ய வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் சென்னை போலீசாருக்கு உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 19-ம் தேதி பாடலாசிரியர் சினேகன் மீது அவதூறு பரப்புதல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு:

இந்த நிலையில் சினேகம் அறக்கட்டளை பண மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என பாடலாசிரியர் சினேகன் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எழும்பூர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாஜக நிர்வாகி மற்றும் நடிகையான ஜெயலட்சுமி மீது மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.