”அஜித் 62” படத்தில் ’அது நடக்கவே நடக்காது’ என சொன்ன விக்னேஷ் சிவன்! என்ன தெரியுமா?

”அஜித் 62” படம் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு ’அது நடக்கவே நடக்காது’ என்று விக்னேஷ் சிவன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”அஜித் 62” படத்தில்  ’அது நடக்கவே நடக்காது’ என சொன்ன விக்னேஷ் சிவன்! என்ன தெரியுமா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிக்கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கவிருக்கும் ‘அஜித் 62’ படம் குறித்த  கேள்வி ஒன்றுக்கு ‘அது நடக்கவே நடக்காது’ என்று அவர் பதிலளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம், கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருக்கும் விஜய்சேதுபதி, அடுத்ததாக ‘அஜித் 62’ படத்திலும் வில்லனாக நடிக்க போகிறார் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. 

இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், ‘என்னுடைய ஹீரோவை நான் வில்லனாக பார்க்க மாட்டேன், அது நடக்கவே நடக்காது’ என்று பதில் கூறியுள்ளார். ஏனென்றால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’நானும் ரவுடிதான்’ மற்றும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருப்பதால் இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த பதில் இணையதளங்களில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதன்மூலம் ‘அஜித் 62’ படத்தில் விஜய்சேதுபதி வில்லன் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.