எழுத்தாளர் கபிலனின் மகள் தற்கொலை.. காரணம் இதுதானா? இங்கேயும் இப்படி எல்லாம் நடக்குமா என்ன?

தற்கொலை ஒரு தீர்வல்ல என நீண்ட பதிவை எழுதியவரா இந்த முடிவை எடுத்தார்?

எழுத்தாளர் கபிலனின் மகள் தற்கொலை.. காரணம் இதுதானா? இங்கேயும் இப்படி எல்லாம் நடக்குமா என்ன?

பாடலாசிரியர் கபிலன்:

சென்னை அரும்பாக்கத்தில் பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். 28 வயதான அவரது மூத்த மகள் தூரிகை, MBA படித்துவிட்டு ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றி வந்தார். எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முக திறமைக் கொண்ட அவர், BEING WOMEN என்ற இதழையும் நடத்தி வந்துள்ளார். 

தூக்கிட்டு கொண்ட தூரிகை:

இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் 3வது தளத்தில் உள்ள மின் விசிறியில் தூரிகை தூக்கிட்டுக் கொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மகளை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

காதல் தோல்வியா?

தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  தூரிகை தான் விரும்பிய ஒரு நபரை காதலித்து வந்ததாகவும், ஆனால் அவரது வீட்டில் வேறு நபருடன் திருமணம் செய்துகொள்ள தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல..!

தற்கொலை செய்து கொண்ட தூரிகை, தனது முகநூலில் கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை எதற்கும் தீர்வல்ல எனும் ஒரு நெடும் பதிவை பதிவிட்டுள்ளார். அப்படி இருக்க தற்போது எப்படி இந்த முடிவை எடுத்தார்? என அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். தூரிகையின் தற்கொலை, திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.