முதல்வருடன் செல்பி எடுத்த யாஷிகா ஆனந்த்

ஈ.சி.ஆர் சாலையில் நேற்று காலை சைக்கிள் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலினுடன் நடிகை யாஷிகா ஆனந்த்  செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல்வருடன் செல்பி எடுத்த யாஷிகா ஆனந்த்

திமுக தலைவர் தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுவாக சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 

அந்த வகையில் தற்போது தமிழக முதல்வராக இருக்கும் மு.க ஸ்டாலின் பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் தனது சைக்கிளிங் பயணத்தை விடாமல் செய்து வருகிறார். அந்த வகையில் ஞாயிற்றுகிழமையான நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் திடீரென சைக்கிளில் சாதாரணமாக சென்று கொண்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அவரை சுற்றி சிலர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதனைக்கண்ட பொதுமக்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அருகே சென்ற இளைஞர்கள் சிலர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக சைக்கிளிங் செய்துக் கொண்டிருந்த நடிகை யாஷிகா ஆனந்த் முதல்வர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.