ஏற்காடு சுற்றுலா "வாகனங்கள் ஆய்வுக்கு பின்னரே அனுமதி" சேலம் ஆட்சியர்...!!

ஏற்காடு சுற்றுலா "வாகனங்கள் ஆய்வுக்கு பின்னரே அனுமதி" சேலம் ஆட்சியர்...!!

ஏற்காட்டிற்கு செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம்  தெரிவித்துள்ளதாவது, "சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில் நடந்த வாகன விபத்துக்களை ஆய்வு செய்ததில் வாகனங்களில் பிரேக் பிடிப்பதில் பிரச்சனை இருந்ததும் அதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளானதும் தெரியவந்துள்ளது. எனவே ஏற்காட்டிற்கு செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும். 

மேலும், மலைப்பகுதிகளில் வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களின் திறனும் துறை அலுவலர்களால் சோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும். இதன் மூலம், ஏற்காட்டிற்கு வருகை தரும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப் படுகிறது" என மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம்  தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:பிக் பாஸில் அசிம் போலியாக வெற்றி பெற்றதாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்...!!