இனி இவர் ட்ரக் டீலர் அல்ல!!! டாக்டர் யுவன்!!!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தற்போது டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

இனி இவர் ட்ரக் டீலர் அல்ல!!! டாக்டர் யுவன்!!!

பலருக்கும் இசையின் மீதான அர்வம் உண்டானதற்கு ஒரு காரணம் இசைஞானி இளையராஜா தான். 70களில் தொடங்கி, 90கள் வரை திரையுலகை ஆண்டு வந்த ராஜா வீட்டு சின்ன ராஜா தான், யுவன் ஷங்கர் ராஜா. ‘மேஸ்ட்ரோ’ இளையராஜாவின் மகன் என்ற பெயரைத் தாண்டி, தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி, சுமார் 2 தசாப்தங்களை ராஜ்ஜியம் செய்கிறார் ‘லிட்டில் மேஸ்ட்ரோ’.

சமீபத்தில் கூட, யுவன் ஷங்கர் ராஜா திரைப்பயணத்தின் 25 ஆண்டுகளைக் கொண்டாடிய ரசிகர்கள், யுவனை, ‘டிரக் டீலர்’ எனச் செல்லமாக அழைக்கக்கூடியவர்கள். அதாவது, இரவு நேரங்களில் தூக்கம் வர வைக்கவும், மனது சோர்வாக இருக்கும் போது அதனை சரி செய்யவும், யுவனது இசையை கேட்டால் போதும் என ரசிகர்கள் கூறுவார்கள், அதனால் தான் அவரது பாடல்கள் போதைத் தரக்கூடியதாக அனைவராலும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான விருமன், குருதியாட்டம், மாமனிதன், வீரமே வாகை சூடும் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்த ட்ரக் டீலர் தற்போது டாக்டர் ஆகியுள்ளார். சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த செய்தி, அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி கொடுத்துள்ளது. இதனால், ட்ரக் டீலர் டாக்டரானார் என அவரது ரசிகர்களும், நெட்டிசன்களும் மீம் போட்டு அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.