பரபரப்பாக நகரும் யூகி படத்தின் டிரைலர்...!

பரபரப்பாக நகரும் யூகி படத்தின் டிரைலர்...!
Published on
Updated on
1 min read

தமிழில் மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தில் தந்து திரைபயணத்தை தொடர்ந்தார் நடிகர் கதிர். அதன்பின்னர் சில திரைப்படங்களில் நடித்த அவருக்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் திரைபடம் வெளியாகி அவருக்கு நல்ல பெயரை பெற்றுதந்தது. அதில் அவருக்கு ஜொடியாக கயல் ஆனந்தி நடித்திருந்தார். தற்போது இவர்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம், யூகி.
சாக் ஹாரிஸ் இயக்கத்தில் உருவாகிவருன் இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்த நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  கதிர், கயல் ஆனந்தி உடன் நரேன், பவித்ரா லக்ஷ்மி, நட்டி என்கிற நட்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டரை நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த ட்ரைலரில் பரபரப்பாக நகர்கிறது. மேலும் இந்த ட்ரைலரில், சமீப நாட்களாக பரபரபாக பேசப்பட்டு வரும் வாடகை தாய் குறித்து இந்த படத்தில் கதை சொல்லப்படுள்ளது.  தற்போது 2மில்லியன் பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com