கைதி படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகர்!

நடிகர் நரேன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கைதி படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகர்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆரம்ப கால படங்களில் நடித்த நடிகர்கள் பலரையும் தனது அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பளித்து வருகிறார். தற்போது விக்ரம் படத்திலும் வாய்பளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 'கைதி' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் நரேன் தற்போது விக்ரம் படத்திலும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கைதி படத்தை அடுத்து நரேன் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக இணைவதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது.