பீஸ்ட் படத்தில் இணைந்த நகைச்சுவை நடிகர்..! ஹீரோக்களை விட பிசியாக வலம் வரும் யோகி பாபு..!

ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் யோகி பாபு..!

பீஸ்ட் படத்தில் இணைந்த நகைச்சுவை நடிகர்..! ஹீரோக்களை விட பிசியாக வலம் வரும் யோகி பாபு..!

தமிழ் சினிமாவில் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. நிறைய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர், பின்னாளில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வர ஆரம்பித்தார். குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட விஜய், சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்ட உட்சபட்ச நடிகர்களுடன் நடித்து தற்போது ஹீரோக்களை விட மிகவும் பிசியாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். 

கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ள நடிகர் யோகி பாபு தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் இணைந்துள்ளார். கடந்த சில நாட்களாக அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பில் இருந்து, தற்போது பீஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாக தனது சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவித்திருக்கிறார்.