பிஎஸ்பிபி பள்ளி சம்பவம் போல எனக்கு நடக்கவில்லை,.என் நண்பர்களுக்கு நடந்தது.! நடிகை கெளரி கிஷன்  விளக்கம்.! 

பிஎஸ்பிபி பள்ளி சம்பவம் போல எனக்கு நடக்கவில்லை,.என் நண்பர்களுக்கு நடந்தது.! நடிகை கெளரி கிஷன்  விளக்கம்.! 

பி.எஸ்.பி.பி பள்ளியில் நடந்த பாலியல் அத்துமீறல் தமிழக அரங்கில் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. அதைத் தொடர்ந்து பலரும் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை சமூகவலைதளங்கள் வாயிலாக கூறிவருகின்றனர். அதன்படி மாஸ்டர், 96 போன்ற படங்களில் நடித்த நடிகை கெளரி கிஷன் ஒரு வீடியோ வெளியிட்டார்.

அந்த வீடியோவில் பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து பேசியிருந்தார். அதை பார்த்த சிலர்  கெளரி கிஷனுக்கு தான் பள்ளியில் இப்படி நடந்ததா என்று அவரிடம் கேள்வியெழுப்பினர். 


இதற்கு பதிலளித்த கெளரி கிஷன் "நான் படிக்கும்போது எந்த விதமான பாலியல் கொடுமைகளையும் அனுபவித்ததில்லை. நண்பர்கள் அனுபவித்த அதிகார துஷ்பிரயேக கொடுமைகள் குறித்துதான் ட்விட்டரில் ஷேர் செய்திருந்தேன். ஆனால், அது பிஎஸ்பிபி பள்ளிபோல் எனக்கு நடந்ததாக பல ஊடகங்களில் தவறாக செய்தி வெளியாகி விட்டது" எனக் கூறியுள்ளார்.