சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் கால் பதித்தவர் என்றும் சொல்லலாம்.
இவர் நடித்த முதல் படம் ஒ மை கடவுளே. இந்த திரைப்படம் விமர்ச்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து வைபவுக்கு ஜோடியாக வாணி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான, லாக்அப் படத்திற்கு, கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.
அதுமட்டுமல்லாது நடிகர் ஜெய் உடன் இணைந்து ட்ரிபிள்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இது தவிர சமூக வலைதளங்களிலும் எப்போது ஆக்டிவாக இருக்கும் வாணிபோஜன் அடிக்கடி தனது புகைப்படங்களையும் பதிவிடுவார்.
அந்த வகையில் தற்போது கன்னத்தில் கை வைத்து சிர்ப்பது போன்ற க்யூட் ஆன புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.