மீண்டுமொரு தெலுங்கு படத்தில் தனுஷ்..! பட படப்பிடிப்பில் வந்த பட வாய்ப்பு..!

புதிய தெலுங்கு படத்தில் தனுஷ் ஒப்பந்தம்..?

மீண்டுமொரு தெலுங்கு படத்தில் தனுஷ்..!  பட படப்பிடிப்பில் வந்த பட வாய்ப்பு..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் தனுஷ். அசுரன், கர்ணன் போன்ற படங்கள் மூலம் மக்களின் மனதை கொள்ளையடித்துள்ள தனுஷ், ஹிந்தி மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்தார். 

ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தயாராகும் ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத் திரும்பினார். அங்கு கார்த்திக் நரேன் இயக்கும் டி43-வது படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கும் புதிய படம் மூலம் தெலுங்கிலும் கால் பதிக்கவிருக்கிறார் தனுஷ். டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

தெலுங்கில் தற்போது தான் தனது பயணத்தை தொடங்கவிருக்கும் தனுஷ், தொடர்ந்து அடுத்த ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் பெயரிடப்படாத படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நாக வம்சி தயாரிக்கிறார். தெலுங்கில் தொலி பிரேமா, மிஸ்டர் மஜ்னு, ரங்தே போன்ற படங்கள இயக்கிய வெங்கி அட்லூரி தனுஷின் அடுத்த தெலுங்கு படத்தை இயக்கவுள்ளார். 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷ் விரைவில் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பிற்கு போன இடத்தில் தனுஷிற்கு அடுத்தடுத்து ஜாக்பாட் அடித்துள்ளதால், தமிழைப் போல் தெலுங்கிலும் ஒரு கலக்கு கலக்குவார் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.