இப்போது மனம் தளரக் கூடாது..! தலையின் ஆறுதலால் மனம் நெகிழும் சிவா..! என்ன நடந்தது?

பிரின்ஸ் திரைப்படத்தின் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு நடிகர் அஜித் ஆறுதல்.
ரஜினி, அஜித்திற்கு பின் சிவா:
சினிமாவில் தன்னைப்போலவே எந்தவித பின்ணணியும் இல்லாமல் உச்சத்தை தொட்டதால் ரஜினிக்கு அஜித் மீது தனி அக்கறை உண்டு. தலைவருக்கு அடுத்து தல என்று ரசிகர்களும் அவரை ஆதரித்தனர். அதேபோல இந்த காலகட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடுத்தர குடும்பத்தில் இருந்து தொலைக்காட்சியில் இருந்து ஷாருக்கானைபோல மிகவும் போராடி முன்ணணி முதல்வரிசை நடிகராக வந்திருப்பதை ரஜினியும், அஜித்தும் தங்களைப்போன்ற ஒருவன் வெற்றி பெற்றிருப்பதை தங்களுடைய வெற்றியாகவே பார்க்கின்றனர்.
ரஜினி ரசிகர்:
தன்னுடைய திறமையால் எல்லா தடைகளையும் உடைத்தெரிந்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதை சிவாவும் பல மேடைகளில் வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு படத்திற்க்கு பின்பும், தலைவர் பேசி பாராட்டுவது தனக்கு உத்வேகத்தை அளிப்பதாக சிவகார்த்திகேயன் பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : ஒரு தல காதல் தந்த வாத்தி... “பொயட்டு” தனுஷின் புதிய பாடல்...
பிரின்ஸ்:
கொரோனா காலத்தில் 2 ஆண்டுகளாக திரையரங்குகளில் எந்த படமும் வெளியாகவில்லை, மக்கள் அனைவரும் வீட்டிலேயே ஓடிடி தளத்தில் படங்களை பார்த்து வந்த் நிலையில், கொரோனா கால தடைகளுக்கு பின்னர் திரையங்கில் வெளியான டாக்டர் திரைப்டம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு வெளியான டான் படமும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வெற்றி படமாக அமைந்தது. அதன் பின்னர் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் திரைப்படம் தோல்வி அடைந்துள்ளது. மக்களிடம் கலவையான விமர்சங்களை பெற்றாலும் சிவகார்த்திகேயனுக்கு அது தோல்வி படமாகவே பார்க்கப்படுகிறது.
விமர்சனங்கள்:
பிரின்ஸ் படத்துக்கு சமூகவலைதளங்களிலும் யூடியூப்போன்ற காணொளிகளிலும் பல விமர்சனங்கள் எழுந்தது. விமரசனங்களை எப்போதும் மிகச்சாதாரணமாக கடந்துபோகும் சிவகார்த்திகேயன் நான்கு புறமும் வந்த எதிர்ப்பால் இதை எப்படி எதிர்கொள்வது என்கிற சிந்தனையில் இருந்துள்ளார்.
<--?php if (!empty($post_tags)): ?>
<--?php echo trans("post_tags"); ?>
<--?php endif; ?>'பொம்மை நாயகி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பா.ரஞ்சித்...
பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் 'பொம்மை நாயகி' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் 'பொம்மை நாயகி' படத்தின் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்று வருகிறது.இதில் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், நடிகர் யோகி பாபு, இயக்குநர் ஷான், நடிகை சுபத்ரா, நடிகர் ஹரி உள்பட படக்குழு அனைவரும் பங்கேற்றுள்ளனர். சிறப்பு விருந்தினராக இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டுள்ளார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் மேடையில் பேசுகையில்,
பொம்மை நாயகி இயக்குநர் ஷான் இவ்வளவு பேசுவதை முதல் முறை பார்க்கிறேன். அவருடைய நிதானம் இப்போதுதான் புரிந்தது. சினிமா என்பது ஒரு பயங்கரமான கலை. பரியேறும் பெருமாளில் யோகி பாபு நடித்தது பிடித்திருந்தது. அப்போது இந்த கதையில் யோகி பாபு செய்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. இந்த கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
மேலும் படிக்க | பட்டு வேட்டியில் பட்டையைக் கிளப்பும் சல்மான் பாய்... ரசிகர்களை சுண்டி இழுக்கும் டீசர்...
இப்படி ஒரு Sensitive ஆன கதையை உருவாக்கும் போது, நியாயமாக மக்களிடம் கூற வேண்டும் என நினைத்தேன். வணிகம் என்றால் இந்த படத்துக்கு யோகி பாபு தான். அவர் வந்த பின்புதான் இது விரிவடைந்தது. நீலம் தயாரிப்பில் ஒரு படம் செய்கிறோம் என்றால் எனக்கு சமூக பொறுப்புகள் உள்ளது.
சிறிய படங்களை விற்பது சாதாரண விஷயம் கிடையாது. மேலும் ஓடிடியில் விற்கவே முடியாது. அவர்கள் வாங்கும் படங்கள் பெரிய நடிகர்களுடையதுதான். சிறிய படங்கள் வெளியீட்டில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. அதுவும் ஓடிடியை தொடர்பு கொள்ளவே முடியாது.
மேலும் படிக்க | எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி வாகை சூடிய பதான்...
திரையரங்கம்தான் ஜனநாயகமான மீடியம் என நினைக்கிறேன். ஆனால் ஓடிடியை நெருங்குவது கடினம். சிறிய படங்களுக்கு மிகப்பெரிய சிக்கல் இருக்கிற சூழலில்தான், பொம்மை நாயகி போன்ற படங்களை பெரும் நம்பிக்கையில் எடுக்கிறோம்.
இந்த படத்தை தயாரித்தது மன நிறைவாக இருக்கிறது என்பதை பெருமையாக கூறுகிறேன். இந்த படத்தில் அனைவரின் நடிப்பும் பேசப்படும். யோகி பாபு நடிப்பில் வேறொரு பரிமாணத்தை பார்க்கலாம். இந்த படம் உங்களை சரியான பாதையில் வழிநடத்தும் என நம்புகிறேன். ஜெய்பீம்.
மேலும் படிக்க | பிறந்த நாளில் உயிரிழந்த நடன கலைஞர்...!
நடிகர் ஷாருக்கான் தனது பதான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ஷாருக்கான் பதான் திரைப்படம் நாடு முழுவதும் அண்மையில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்துள்ளது. இந்த நிலையில் இதனை கொண்டாடும் விதமாக மும்பையிலுள்ள ஷாருக்கான் வீட்டின் முன்பு ஆயிரகணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
அவர்களைச் சந்தித்த ஷாருக்கான் ரசிகர்களை நோக்கி கையசைத்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்.
மேலும் படிக்க | பட்டு வேட்டியில் பட்டையைக் கிளப்பும் சல்மான் பாய்... ரசிகர்களை சுண்டி இழுக்கும் டீசர்...
#WATCH | Actor Shah Rukh Khan acknowledges greeting of his fans who gathered outside his Mumbai residence amid box office success of his film 'Pathaan' pic.twitter.com/JeVLOLfTd0
— ANI (@ANI) January 29, 2023
10-வது மாடியில் இருந்து கீழே விழுந்து சினிமா நடன கலைஞா் உயிாிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடன கலைஞர் தற்கொலை :
சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் குடிசை மாற்று வாரிய பகுதியை சோ்ந்தவா் சினிமா நடன கலைஞா் ரமேஷ். இவர் திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் நடன கலைஞராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் கூட நடன கலைஞர் ரமேஷ் நடித்திருந்தார்.
இதையும் படிக்க : ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாள் எப்போ தெரியுமா?வெளியானது அறிவிப்பு!
இப்படி திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் நடன கலைஞராக பணியாற்றி வந்த இவருக்கு ஏற்கனவே, சித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இன்பவள்ளி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு ரமேஷ் அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டாா்.
இந்நிலையில் நடன கலைஞர் ரமேஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு 2-வது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளாா். அதற்கு அவா் மறுப்பு தொிவிக்கவே பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்து பாிதாபமாக உயிாிழந்துள்ளார். கணவன் ரமேஷின் தற்கொலை குறித்து தகவலறிந்த முதல் மனைவி தனது கணவா் மரணத்தில் மா்மம் இருப்பதாக பேசன் பிாிட்ஜ் போலீசில் புகாா் அளித்தாா். புகாரின் போில் வழக்குப் பதிவு செய்த போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தோனி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் தமிழ் படம் குறித்தானா அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவருமானவர் எம்.எஸ்.தோனி. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஓட்டல், உடற்பயிற்சிக்கூடம், இயற்கை விவசாயம், சென்னையின் எஃப் சி கால்பந்து அணியின் உரிமை என பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் சினிமாத்துறையிலும் 'தோனி எண்டர்டென்மெண்ட்' என்ற நிறுவனத்தை தொடங்கி தற்போது நேரடி தமிழ் படம் ஒன்றை தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதையொட்டி தோனி தயாரிக்கும் 'Let's get married' படத்தின் டைட்டிலை மோஷன் போஸ்டர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ரமேஷ்தமிழ்மணி இயக்க உள்ள இந்த படத்தில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ், துபாய் செல்வதற்கு டெல்லி பட்டியாலா நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் 200 கோடி ரூபாய் கையாடல் வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நடிகைகளில் ஒருவர் எனக்கூறி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கலந்துரையாடல் நிகழ்வுக்காக துபாய் செல்ல அவர் மனுத்தாக்கல் செய்திருந்ததையடுத்து அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.