ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் பட்ஜெட் இவ்வளவா..? 

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் பட்ஜெட் இவ்வளவா..? 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய தெலுங்கு படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படம், பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்துவைக்கப்பட்டுள்ளது. விரைவில் தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது.

இதற்கிடையில் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தின் பணிகளை இயக்குநர் ஷங்கர் துவங்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி முதல் புனேவில் துவங்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு ரூ.200 கோடி பட்ஜெட்டை ஷங்கர் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.