இயக்குநர் ஹரியின் தந்தை காலமானார்...!

Published on
Updated on
1 min read

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஹரியின் தந்தை திரு வி.ஆ.கோபாலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார்.

தமிழ் திரைத்துறையில் பல்வேறு அதிரடியான குடும்பப் படங்களை தந்தவர் பிரபல இயக்குனர் ஹரி. இவர் இயக்கிய சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள்  இவருக்கென்ற ஒரு தனி இடத்தை பெற்று தந்தது. அதிலும் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படி சினித்துறையில் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் ஹரியின் தந்தை, இன்று உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்த ஹரியின் தந்தை திரு கோபாலகிருஷ்ணன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக ஹரியின் தந்தை இன்று காலை காலமானார். அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் திரையுலகினர் அஞ்சலிக்காக இன்று பிற்பகல் 2 மணி வரை வைக்கப்பட்டிருக்கும். பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெறும் என கூறப்படுகிறது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com