பிறந்தநாள் காணும் ஃபகத் ஃபாசில்!

தனது 40 வது பிறந்தாநாளைக் கொண்டாடும் நடிகர் ஃபகத் ஃபாசிலுக்கு, அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாள் காணும் ஃபகத் ஃபாசில்!

மலையாளத் திரையுலகின் கமல் என ரசிகர்களால், செல்லமாக அழைக்கப்படும் நடிகர் ஃபகத் ஃபாசில், இன்று தனது 40வது பிறதநாளைக் கொண்டாடுகிறார். மோலிவுட்டில் துவங்கினாலும், இன்று இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலமாகி பான் இந்தியா நட்சத்திரமாக உருவெடுத்திருக்கும் ஃபகத் ஃபாசில், பல கோடி ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார்.

பின்னணி இன்றி முன்னணிக்கு வந்த நாயகன்:

இன்று நடிகர், தயாரிப்பாளர் என திரையுலகில் தனக்கென்று தனி இடம் பிடித்த ஃபகத், தனது அறிமுகத்தை, கையேதும் தூராத் என்ற படம் மூலமே கொடுத்தார். ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் மலையாள திரையுலகில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல், தாமாக முன்வந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருப்பது பாராட்டுதற்குறியது.

Fahadh faasil and nazriya: Latest News, Videos and Photos of Fahadh faasil  and nazriya | Times of India

விமர்சிக்கப்பட்ட காதல்:

வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஃபகத், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இடையில் பிரபலமானது அவரது காதல் மனைவி நஸ்ரியா மூலமாகத் தான். ‘நேரம்’ என்ற படம் மூலம், தமிழ் படங்களில் கதாநயகியாக அறிமுகமான நஸ்ரியா நசீமை, கடந்த 2014ம் ஆண்டு திருமணம் முடித்தார் ஃபகத். பல வருட இடைவேளி இருக்கும் இவர்களது ஜோடி குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், அதனைக் கண்டுக்கொள்ளாமல், தனது நடிப்பில் கவனம் செலுத்தினார் ஃபகத்.

வேலைக்காரன் ஃபகத்:

பின், அவரது திறமையை கவனிக்கத் துவங்கிய தமிழ் சினிமா ரசிகர்கள், அவரது தோற்றம் கோலிவுட்டில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. அப்படிப்பட்ட எதிராபார்ப்பில் வந்த படம் தான் வேலைக்காரன். மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயனுடன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த ஃபகத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. பின், அவரது மலையாளப் படங்களுக்கும் நல்ல வரவேற்பு தமிழகத்தில் கிடைக்கத் துவங்கியது. பின், சூப்பர் டீலக்சில் அவரது எதார்த்த நடிப்பு, உலக மக்களால் ரசிக்கப்பட்டது.

Fahadh Faasil: I rarely think about work at home

பான் இந்தியா நட்சத்திரம்:

தற்போது பான் இந்தியா நட்சத்திரமாக அற்யப்படும் ஃபகதின் முதல் பன்மொழி படம் புஷ்பா - தி ரைஸ் தான். மோசமான காவல் அதிகாரியாக நடித்திருத அவரது பெர்பாமென்ஸ் அனைஅராலும் போற்றப்பட்டது; கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி, மாபெரும் வசூல் வேட்டை செய்த விக்ரம் படத்தில் அவருக்கான வரவேற்பு வானையும் மிஞ்சியது குறிப்பிடத்தக்கது.

யாரது உதவியும் இன்றி,  தனக்குப் பிடித்த துறையில், சாதனைப் புரிந்த ஃபகதின், பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், அவரது ரசிகர்களும், நெட்டிசன்களும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.