லியோ டிக்கெட் விலை ரூ.3000; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

லியோ டிக்கெட் விலை ரூ.3000; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Published on
Updated on
1 min read

சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கிற்கு வெளியே லியோ பட டிக்கெட்  2000 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வரைக்கும் பேரம் பேசி விற்கப்படும் வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழகமெங்கும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தை காண  பல்வேறு திரையரங்குகள் காலைமுதலே ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். லியோ பட டிக்கெட் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு வெளியிலேயே பட்டப்பகலில் பேரம் பேசி விற்கப்படும் வீடியோவால் விஜய் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

உலகம் எங்கிலும் இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து  நடிகர் விஜய், நடிகர் அர்ஜுன், ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்,  நடிகை திரிஷா போன்ற ஏராளமான நட்சத்திர பட்டாளங்களோடு லியோ படமானது அனைத்து திரையரங்குகளிலும் இன்று காலை ஒன்பது மணிக்கு திரையிடப்பட்டது.  

இந்த நிலையில் வெற்றி திரையரங்கில் நேற்று இரவு வரை திரைப்படத்தின் முன்பதிவானது தொடங்கப்படாமல் இருந்தது. திரையரங்கத்தின் உரிமையாளர் ராகேஷ் கௌதமன் அவர்களும், எக்ஸ் வலைதளத்தில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால் முன்பதிவு தொடங்குவதில் தாமதம் நிலவுதாக பதிவிட்டு இருந்தார்  இதனால் விஜயின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகினர். 

இந்நிலையில் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் திரைப்படத்தை எப்படியாவது கண்டுவிட வேண்டும் என ஆவலோடு இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள், வெற்றி திரையரங்க வாசலிலேயே ரூபாய் 2,000 முதல் ரூ.3,000 வரை விலை வைத்து விற்றுக் கொண்டிருந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com