லிப்டில் கதறும் கவின்.. மிரட்டும் ஹாரர் டிரைலர்

லிப்ட் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

லிப்டில் கதறும் கவின்.. மிரட்டும் ஹாரர் டிரைலர்

சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கவினுக்கு கிடைத்தது. 

பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற கவின் முதல் வாரத்திலிருந்து ரசிகர்கள் கவின் தான் வெற்றி பெறுவார் என எதிர் பார்த்து வந்தனர். ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார்.

கவின் நடிப்பில் ஹீரோவாக வெளியான நட்புனா என்ன தெரியுமா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அதனால் ரசிகர்கள் இவர் அடுத்ததாக எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என எதிர்பார்த்திருந்தனர்.


தற்போது கவின் லிப்ட் எனும் படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அமீர்தா நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.