பயங்கர பில்டப் கொடுக்கும் வெங்கட் பிரபு.. மங்காத்தாவை விட சூப்பரா இருக்குமாம் மாநாடு

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

பயங்கர பில்டப் கொடுக்கும் வெங்கட் பிரபு.. மங்காத்தாவை விட சூப்பரா இருக்குமாம் மாநாடு

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

 இயக்குநர் வெங்கட் பிரபு பேசும் போது, “சின்னப்பசங்களை வைத்து படம் இயக்கிய சமயத்தில் யுவன் தான் என் படங்களின் ஹீரோவாக இருந்தார். யுவன் என் படங்களுக்குத்தான் பெஸ்ட்டான பாடல்களை தருவார் என்று எல்லோரும் சொல்வார்கள்.. ஆனால் அவருக்கு செல்வா (செல்வராகவன்) தான் பர்ஸ்ட். 

அந்த விஷயத்தில் எனக்கு கொஞ்சம் பொறாமை கூட உண்டு. எப்படி இளையராஜா-வைரமுத்து கூட்டணி மிகப்பெரிய புகழ்பெற்றதோ, அதேபோல அவர்களது வாரிசுகளான யுவனையும் மதன் கார்க்கியையும் எனது படத்தின் மூலமாகத்தான் ஒன்று சேர்க்கவேண்டும் என நினைத்து ‘பிரியாணி’ படம் மூலம் அதை சாதித்தேன். இதோ இந்தப்படத்திலும் இந்த ’மெர்ஸைலா’ பாடலில் அவர்கள் இணைந்திருப்பதில் சந்தோசம் தான்.. மதன் கார்க்கியின் வார்த்தைகளில் அவரது தந்தை வைரமுத்துவின் சாயலை விட கவிஞர் வாலியின் சாயல் தான் எனக்கு தெரிகிறது. 

ரஜினி சார் நடித்த நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்” என்கிற கல்யாண வீட்டு பாடலை போல கலகலப்பாக இருக்க வேண்டும் என மதன் கார்க்கியிடம் கேட்டேன். அதேபோலவே இந்த பாடல் அமைந்து விட்டது. இந்த பாடலை கேட்டதும் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் சந்தோஷப்பட்டாலும், இந்தபாடலுக்கு சிம்புவுடன் ஆடனுமான்னு கொஞ்சம் பயந்தாங்க.

என்னோட கேரியர்ல மங்காத்தாவை விட இது பெரிய புராஜெக்ட்.. இந்தப்படம் அரசியல் படம் என்றாலும் புதுசா ஒரு ஜானர்ல முயற்சி பண்ணிருக்கேன். எனக்கு தெரிஞ்ச ஜானர்ல அரசியலை இதுல சொல்லிருக்கிறேன். அதனால் மக்கள் எதிர்பார்க்கிற படமாகவும் அவர்கள் எதிர்பாராத ஒரு படமாகவும் இந்த மாநாடு இருக்கும். பரிசோதனை முயற்சியிலான இதுபோன்ற திரைக்கதையில நடிக்க சிம்பு ஒத்துக்கிட்டது பெரிய விஷயம்.. அவரோட ரசிகர்களுக்கும் இந்தப்படம் ரொம்ப புடிக்கும். 

கார் ஓட்டுற காட்சி ஒன்னை படமக்குறப்போ, நான் வேகமா ஓட்டுவேன், அதனால ஒன்ஸ்மோர் கேட்டுறாதீங்கன்னு சிம்பு சொன்னார். அந்த காட்சியை ஒரே டேக்ல படமாக்கினோம். இந்தப்படத்துல சிம்பு ஒரு காமன்மேனா நடிச்சிருக்காரு. அதனால அவருக்குன்னு புதுசா ஏதாவது பஞ்ச் டயலாக் எழுதுன்னா, இந்த கேரக்டர் இப்படி பேசுனா சரியா வருமான்னு பஞ்ச் பேச தயங்குவாரு, விண்ணை தாண்டி வருவாயா படத்துல கௌதம் மேனன் புது எஸ்டிஆரை காட்டிய மாதிரி நானும் இந்த மாநாடு படத்துல புது எஸ்டிஆரை காட்டணும்னு நினைச்சேன்..

சிம்பு-எஸ்ஜே சூர்யா இருவருக்குமான பேஸ் ஆப் தான் படமே. எஸ்ஜே சூர்யா கேரக்டர் பட்டி தொட்டியெல்லாம் படத்தை கொண்டுபோய் சேர்க்கும்.. ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் செகன்ட் யூனிட் டைரக்டர் மாதிரி வேலை பார்த்திருக்கார். ஒரு காட்சில கிட்டத்தட்ட நான்காயிரம் பேரை வச்சு மாநாடு மாதிரி ஒரு காட்சியை படமக்குனோம். இந்த காட்சியோட பிரமாண்டத்தை தியேட்டர் ஸ்கிரீன்ல பார்த்தா தான் நல்லா இருக்கும்.. சிம்புவே படத்தை பார்த்துட்டு படம் புரியுதுப்பா’ன்னு சொல்லிட்டாரு. அந்தவகையில் மாநாடு தியேட்டருக்கான படம்.” என்றார்.