ஒரு போட்டோவுக்கு 1 லட்சமா! இந்திய வம்சாவளி கலைஞர் சாதனை...

ஒரு போட்டோவுக்கு 1 லட்சமா! இந்திய வம்சாவளி கலைஞர் சாதனை...

நேச்சர் டி.டி.எல் என்பது உலகின் முன்னணி ஆன்லைன் இயற்கை புகைப்பட ஆதாரமாகும், இந்த ஆண்டுக்கான சிறந்த புகைப்படக் கலைஞரை தேர்வு செய்ய போட்டி ஒன்றை நடத்தியது நேச்சர் டிடிஎல். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்பவர் 2021 ஆம் ஆண்டின் நேச்சர் டிடிஎல் புகைப்படக் கலைஞர் விருதைப் பெற்றுள்ளார். 

டி.டி.எல் போட்டி ஒன்றை அறிவித்து இதில் வெற்றி பெறுபவருக்கு  1,500 டாலர் பரிசாக வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது. இதன்மூலும் சுமார் 8,000 அதிகமான பலதரப்பட்ட புகைப்படங்கள் நேச்சர் டி.டி. எல் வளைதளப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.  இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்த ஒராங்குட்டானின் ஆப்டிகல் இல்லுசன் புகைப்படம் வெற்றி பெற்றது. மேலும் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த புகைப்படக் கலைஞர் விருதை விஜயன் தட்டிச்சென்றார்.

கேரளாவைச் சேர்ந்த இவர், இப்போது கனடாவில் குடியேறியுள்ளார், அவர் பரிசைப் பெற்ற பின்பு பேசுகையில் "நான் தண்ணீரில் இருந்த ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்தேன். தண்ணீர் ஒரு கண்ணாடியை உருவாக்கியது. அதன்பின் அந்த மரத்தின் மீது நான்  ஏறினேன். அந்த மரத்தில் பல மணிநேரம் காத்திருந்து  ஒராங்குட்டானின் புகைப்படத்தை எடுத்தேன். மேமும் அதற்கு போர்னியோவில் 'தி வேர்ல்ட் இஸ் கோயிங் அப்ஸைட் டவுன்' என்ற தலைப்பு வைத்ததாக 1,500  டாலர் பரிசை பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த தாமஸ்  கூறியுள்ளார்.