தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் உண்மை சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளது. இது கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த திரைப்படம் பயன்படும்.
இந்த திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட வேண்டும், குறிப்பாக தமிழகத்தில் தமிழில் திரையிடப்பட வேண்டும் என இந்து முன்னனி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
உண்மையான சம்பவத்தை திரைப்படமாக எடுத்துள்ளனர். இப்படத்தில் குறிப்பிடபட்டுள்ளது போல் திண்டுக்கல், தேனி, தாராபுரம்,பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் லவ் ஜிகாத் என்ற பெயரில் பெண்கள் மதமாற்றம் செய்யபட்டுள்ள சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக தாராபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் ஒருவரது மகளையும் லவ் ஜிகாத் என்ற பெயரில் மதமாற்றம் செய்யபட்டுள்ளார்.
மேலும் படிக்க | வேங்கை வயல் விவகாரம் ...! 2 மாதத்தில் அறிக்கை தாக்கல்
இந்த நிலையில் அந்த காவல் ஆய்வாளர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவமும் நிகழ்ந்துள்ளது. எனவே இது ஒரு விழிப்புண்ர்வை ஏற்படுத்தும் திரைப்படமாக உள்ளது ஆகவே இந்த திரைப்படத்தை எதிர்ப்பவர்களும், அரசும் விழிப்புணர்வோடு திரையிட்டு திரைப்படத்தை ஓட்ட வைக்க வேண்டும் என இந்து முன்னனி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.