வெளியானது "போ போ” சிங்கிள்; தி லெஜெண்ட் படத்தின் மூன்றாவது பாடல்:

வெளியானது "போ போ” சிங்கிள்; தி லெஜெண்ட் படத்தின் மூன்றாவது பாடல்:

சரவணா ஸ்டோர்ஸ் என்ற ஜவுளி சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்த சரவணன் தற்போது தி லெஜெண்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தி லெஜெண்ட் ப்ரோடுக்க்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி & ஜெர்ரி இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள படத்தின் இசை உரிமையை  திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

Legend movie First Look : ஆக்‌ஷன் ஹீரோவாக மாஸ் காட்டும் அண்ணாச்சி...  வைரலாகும் லெஜண்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்

படத்தில் சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரௌட்டலா நடித்துள்ளார். மேலும் படத்தில், பிரபு, விவேக்,மயில்சாமி, நாசர், தம்பி ராமைய்யா, சுமன், ராய் லட்சுமி, ரோபோ சங்கர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். படத்தின் first லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படத்தின் பாடல் வரிகளை வைரமுத்து, மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், சினேகன் ஆகியோர் எழுதியுள்ளனர். கடந்த மே மாதம் 29 ம் தேதி படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது.  


தி லெஜெண்ட் திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் ஜூலை 28 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

The motion poster of Saravanan's 'The Legend' leaked last night | Tamil  Movie News - Times of India

படத்தின் தெலுங்கு ட்ரைலரை ஜூலை 16 ம் தேதி நடிகை தமன்னா வெளியிட்டார். அதே போல் படத்தின் கன்னட ட்ரைலரை நடிகை ராய் லட்சுமி ஜூலை 17 ம் தேதி வெளியிட்டார். மேலும் படத்திற்கு தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தி லெஜெண்ட் எனவும், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் டாக்டர் எஸ். தி லெஜெண்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தி வெளியீட்டு உரிமையை நம்பி ராஜனின் கணேஷ் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

10 top heroines to grace the Trailer launch of Legend Saravanan's movie  "The Legend" - Deets inside - Tamil News - IndiaGlitz.com

முன்னதாக படத்தில் இருந்து மோசலோ மோசலு பாடலும், வாடி வாசல் பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தி லெஜெண்ட் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான போ போ பாடல் வெளியாகி இன்று மாலை 5.30 மணிக்கு வெளியானது. இந்த பாடலுக்கு தினேஷ் மிஸ்டர் கோரியோ செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து, மதன் கார்க்கி வரியில் இந்த பாடலை பிரசாத் எஸ்.என், ஜோனிதா காந்தி மற்றும் மறைந்த பின்னணி பாடகர் கே.கே ஆகியோர் பாடியுள்ளனர்.  படத்தின் மோஷன் போஸ்டரில் வந்த தீம் இசையானது இந்த பாடலில் உள்ளது போல் அமைந்துள்ளது. மேலும் இந்த பாடலில் இயக்குனரான ஜேடி, ஜெர்ரி நடித்துள்ளனர். ரசிகர்கள் பாடலுக்கு நல்ல கமெண்ட்ஸ்களை கொடுத்தும், படத்திற்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

The Legend Tamil Movie (2022) Cast, Release Date & More - Wiki King |  Latest Important News