அஜித் குமார் நடிப்பில், போனி கப்பூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய படமான வலிமை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அந்த கூட்டணி மீண்டும் இணைந்து ‘ஏகே 61’ படம் உருவாக்கியுள்ளனர்.
ஐதராபாத் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற இந்த படத்தின் ஷூட்டிங்-கை தொடர்ந்து, உலகளவில் பைக்கில் சுற்றுலா வந்து கொண்டிருக்கிறார் அஜித் குமார். அவரது 61வது படமான இந்த ஏகே 61 படத்தின் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது.
விஸ்வாசம் படத்தில், அவரது காரில் எழுதப்பட்டிருந்த “துணிவே துணை” என்பதை தலைப்பாக வைக்க இருப்பதாக பல வதந்திகள் கிளம்பிய நிலையில், தற்போது, படத்தின் தலைப்பு, “துணை” என வைக்கப்பட்டுள்ளது. இதன் போட்டோ வெளியானதில் இருந்து ரசிகர்கள் படு குஷியில் ஆழ்ந்துள்ளனர்.
சமீபத்திய அஜித் படங்களின் தலைப்பு அனைத்தும் ‘வ’கர வரிசையில், வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, வைக்கப்பட்ட இந்த தலைப்பு, ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.