ஆகஸ்ட் முதல் தினமும் 1 கோடி தடுப்பூசி - மத்தியஅரசு

ஆகஸ்ட் முதல் தினமும் 1 கோடி தடுப்பூசி - மத்தியஅரசு

ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி ஒரு கோடி தடுப்பூசிகளை செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸால் இந்தியா பேரழிவை சந்தித்தது. இதையடுத்து இனி வரும் அலைகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

தற்போது தினசரி 30 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுப்பட்டு வரும் நிலையில், இந்த எண்ணிக்கையை வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து தினசரி ஒரு கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கென முன்கூட்டியே தேவையான தடுப்பூசியை கொள்முதல் செய்யும் வகையிலும் மத்திய அரசு 100 கோடி தடுப்பூசிகளுக்கு  ஆர்டர் கொடுத்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் 18 கோடி தடுப்பூசிகளை வழங்கவுள்ளன. இதேபோல் ஃபைசர், பயோடெக் இ நிறுவனங்களின் தடுப்பூசிக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.