100 மடங்கு சிறந்த பாஜக!!!!

100 மடங்கு சிறந்த பாஜக!!!!

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்  மீண்டும் பாஜகவை குறிவைத்துள்ளார். இருப்பினும், இந்த முறை 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை 50 இடங்கள் என்ற நிலைக்கு கொண்டு வருவோம் என்ற அவரது அறிக்கையை அவர் தவிர்த்து வருவதாகத் தெரிகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொண்டால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்பதை உறுதியாக கூறியுள்ளார். 

மாநில செயற்குழு கூட்டம்:

முன்னதாக,நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய நிதிஷ்குமார் 2024 லோக்சபா தேர்தலில் தான் செயல்படும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாஜகவை தோற்கடிக்கும் என்று கூறியிருந்தார். மேலும் 2024ல் பாஜக 50 இடங்களை மட்டுமே  கைப்பற்ற முடியும் எனவும் கூறியிருந்தார்.  ஜனதா தள கட்சியின் மாநில  செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசை எதிர்த்து பல திட்டங்கள் போடப்பட்டுள்ளன. 

டெல்லி பயணம்:

பீகார் முதலமைச்சர் செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லி செல்ல இருப்பதாகவும் மூன்று நாட்கள் பல மூத்த தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.  அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரையும் சந்திக்கலாம் என தெரிகிறது

தீர்மானங்கள்:

​​பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறை, வணிகம் குறைப்பு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

100 மடங்கு சிறந்த பாஜக:

மணிப்பூர் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவின் புகழ் அதிகரித்து வருகிறது என்று சிக்கிம் முதலமைச்சர் என்.பிரேம் சிங் கூறியுள்ளார். அதனால்தான் ஜேடியு மக்கள் பாஜகவுடன் தொடர்ந்து வருகிறார்கள். ஜேடியுவின் அமைப்பை விட பாஜக 100 மடங்கு சிறந்தது எனவும் ஜேடியு தொண்டர்கள் பலர் பாஜகவில் இணைந்துள்ளனர் எனவும் அவர்கள் அனைவரையும் வரவேற்பதாகவும் கூறியுள்ளார் பிரேன் சிங்.

இதையும் படிக்க: விபத்தில் இறந்த சைரஸ் மிஸ்த்ரி யார்? டாடா குழுமத்திற்கும் அவருக்கும் என்ன தொடர்பு?!!!