அசாமில் 18 மாவட்டங்கள் கடும் வெள்ளத்தால் தத்தளிப்பு!

அசாமில் கடும் வெள்ள பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 பேர் பலியாகியுள்ளனர். இதனால் வெள்ள பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

அசாமில் 18 மாவட்டங்கள் கடும் வெள்ளத்தால் தத்தளிப்பு!

அசாமில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் மூழ்கி பல கிராமங்கள் நீரில் மிதக்கின்றன. தற்போது 18 மாவட்டங்கள் கடும் வெள்ளத்தால் தத்தளிப்பதாகவும், இதில் சுமார் 6. 62 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வெள்ள பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் பலியாகியுள்ளதாகவும், இதனால்  பலியானோர் எண்ணிக்கை 26 அம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நாகோன் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு மட்டும் சுமார்  3.46 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பரிதவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.