அக்னிபாத் திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் இருந்து 3 லட்சம் ரூபாய் கொள்ளை..!

பீகாரில் அக்னிபத் போராட்டத்தின்போது, ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் இருந்து ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

அக்னிபாத் திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் இருந்து 3 லட்சம் ரூபாய் கொள்ளை..!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டு உள்ளது. பீகார் மாநிலத்தில் அர்ரா நகரில் பிஹியா ரெயில் நிலையத்தில்  இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. டிக்கெட் கவுண்டரை கல்வீசித் தாக்கிய போராட்டக்காரர்கள் அதனை தீவைத்துக் கொளுத்தினர். இதனைத் தொடர்ந்து கவுண்டரில் இருந்த 3 லட்ச ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்து பரப்பப்படும் தவறான தகவல் மற்றும் தவறான புரிதலால் போராட்டங்கள் நடைபெறுவதாக கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இளைஞர்கள் நாட்டுக்காக பணியாற்ற ஒரு சிறந்த வாய்ப்பு எனவும் கூறி உள்ளார்.