கேரளாவில் 3 வது நபருக்கு குரங்கம்மை உறுதி..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் 3 வது நபருக்கு குரங்கம்மை உறுதி..!

குரங்கம்மை & அதன் அறிகுறிகள்  :  

குரங்கம்மை, விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் தொற்று ஆகும். இது முதன் முதலில் காங்கோ நாட்டில் 1970 ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று உண்டாவது மிக அரிதான ஒன்று. இதனால் பாதிக்கப்படுபவர்கள் சில வாரங்களிலேயே குணமடைந்து வீடு திரும்பி விடுவார்கள் என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை ஒரு தகவல் கூறி இருக்கிறது. 

     அறிகுறிகள் :
             1. பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, தசை வலி, சோர்வு ஏற்படும்.
              2. காய்ச்சலுக்கு பின், தடிப்புகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக இந்த தடிப்புகள் முகத்தில் உண்டாகும். 
               3. பொதுவாக உள்ளங்கை மற்றும் பாதங்களில் இந்த தடிப்புகள் உண்டாகும். இதனால் தழும்புகளும் ஏற்படும். 

குரங்கம்மை பாதிப்பு : 

இந்தியாவின் முதல் குரங்கம்மை பாதிப்பு கேரளாவில் உள்ள ஒருவருக்கு கடந்த ஜுலை 15 ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.இந்த தொற்று பாதிக்கப்பட்டவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பியுள்ளார்.  அதனை தொடர்ந்து, ஜூலை 18ம் தேதி, கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைதை சேர்ந்த ஒருவருக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டது. அவர் துபாயிலிருந்து கேரளா திரும்பியவர் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் கேரளாவில் தடுப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டது. 

குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை : 

இந்நிலையில் தற்போது, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய 35 வயதான நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அம்மாநில சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதிபடுத்தியுள்ளார். தொற்று கண்டறியப்பட்ட பின் தற்போது அவர், மஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.