' 4 கிலோ தங்கம், 200 கிலோ வெள்ளி - வரதட்சணையாக கொடுத்தும் போதவில்லையா...? ' மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்...!

பெங்களுருவில் போதைக்கு அடிமையான கணவர், தன் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்துவதாக மனைவி புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

' 4 கிலோ தங்கம், 200 கிலோ வெள்ளி - வரதட்சணையாக கொடுத்தும் போதவில்லையா...? ' மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்...!

பெங்களூருவை சேர்ந்த சந்தீப் என்ற நபருக்கும், தெலுங்கானாவில் பிரபலமான ஆடைத் தொழில் உரிமையாளரின் மகளுக்கும் கடந்த 2021ம் ஆண்டு தெலுங்கானாவில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் 6 கோடி ருபாய் செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது.  அந்த திருமணத்தின் போது, பெண்ணின் பெற்றோர், 4 கிலோ தங்கம், 200 கிலோ வெள்ளி, ரூ. 55 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். மேலும் அதோடு, இரண்டு துணி கடைகளையும் பரிசாக அளித்திட்டுள்ளனர். 

பின்னர், நாட்கள் செல்ல செல்ல, சந்தீப் போதைக்கு அடிமையானவர் என்பது தெரிய வந்துள்ளது. தினமும் வீட்டில் தனது நண்பர்களுடன் மது விருந்து நடத்தி வந்துள்ளார். இதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவிக்கவே, அங்கிருந்து தொடங்குகிறது பிரச்சனை. மனைவி எதிர்ப்பு தெரிவிக்கவே, சந்தீப் தனது நண்பர்கள் முன்னிலையிலேயே அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பெண், சந்தீப் மீது பசவனக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த புகாரில் சமீப நாட்களுக்கு முன்னர், மது போதையில் இருந்த சந்தீப், தன் தலையில் சிறுநீர் கழித்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் சந்தீப் மீது வரதட்சணை கொடுமை மற்றும் போதையில் மனைவி மீது சிறுநீர் கழித்ததாக வழக்கு பதிந்து எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.