6 மாதத்திற்கு பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்...விவாதத்திற்கு வர உள்ள தலைப்புகள் என்னென்ன தெரியுமா?

6 மாதத்திற்கு பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்...விவாதத்திற்கு வர உள்ள தலைப்புகள் என்னென்ன தெரியுமா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 48வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறுகின்ற இக்கூட்டத்தில் பிற மாநில நிதியமைச்சர்களுடன் தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பங்கேற்கிறார்.

விவாதத்திற்கு வர வாய்ப்புள்ள தலைப்புகள்:

1. இந்த கூட்டத்தில், பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு குறிப்பிட்ட சிறப்பு வரி விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான இறுதி ஆய்வு அறிக்கையை ஒடிசா நிதியமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் தாக்கல் செய்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் பான் மசாலா, குட்காவுக்கு கூடுதல் வரிவிதிப்பு வரலாம் எனவும், இந்த குழு பரிந்துரை செய்துள்ள பான் மசாலா, குட்கா, சிலம், மெல்லும் புகையிலை உள்ளிட்ட 38 பொருட்களுக்கு சிறப்பு வரி விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ஆவின் பால் முதல்...ஆவின் வெண்ணெய் விலையேற்றம் வரை...!

2. அனைத்து விதமான பழக்கூழ் அல்லது பழரசங்களில் கார்பன்டை ஆக்ஸைடு சேர்த்து பதப்படுத்தப்படும்போது, அதற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்றும்,

3. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் தனியார் சுத்திகரிப்பாளர்களுக்கு ஜிஎஸ்டி வரியில் 5 % விலக்கு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

4. அதேபோல், அறிவியல் ஆராய்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் சாதனங்களுக்கான கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் வல்லுநர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இந்த வரி உயர்வால் ஆராய்ச்சிகள் பாதிக்கப்படலாம் என கவலை தெரிவித்தனர். எனவே, இந்த பொருட்களுக்கான வரி குறைக்கப்படலாம் என்றும்,

5. பேக்கிங் செய்யப்பட்ட, லேபிள் இடப்பட்ட சில்லறையில் விற்கப்படும் தயிர், லஸி, மோர் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை நீக்கி சில உணவுப் பொருட்கள் மற்றும் தானியங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படலாம் எனவும், 

இதையும் படிக்க: 1 டைம் யூஸ் லைட்டர்...இறக்குமதியை மத்திய அரசு தடை செய்யுமா? வைகோ கேள்விக்கு...பதிலளித்த அமைச்சர்!

6. ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரை பந்தயத்துக்கு 28 சதவீத ஜிஎஸ்டிக்கு ஒப்புதல் வழங்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த பின்னணியில், கடைசியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இந்த ஆண்டு ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சண்டிகரில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எல்இடி விளக்குகள், கோலார் வாட்டர் ஹீட்டர்கள் போன்ற பல்வேறு பொருட்களின் மீதான ஜிஎஸ்டியை 47வது ஜிஎஸ்டி கவுன்சில் உயர்த்தியது. பின்னர் ஜிஎஸ்டி கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட உத்தேச கட்டண மாற்றங்கள் ஜூலை 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.