நாடு முழுவதும் காலியாகும் 57 ராஜ்யசபா எம்பி பதவி...!

தமிழக மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடர் இழுபறி நீடித்து  வருகிறது.

நாடு முழுவதும்  காலியாகும் 57 ராஜ்யசபா எம்பி பதவி...!

நாடு முழுவதும்  57  ராஜ்யசபா உறுப்பினர் பதவி இடங்கள் ஜுன் மாத இறுதியில் நிறைவடைகிறது. இதையொட்டி  காலியாகும்  ராஜ்யசபா பதவிகளுக்கு ஜுன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

திமுக கூட்டணி 4 இடங்களிலும்  அதிமுக இரண்டு இடங்களிலும் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல்  நேற்று தொடங்கியது.திமுக சார்பில்  3 இடங்களுக்கான வேட்பாளர்கள்  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 1 இடத்திற்கு இன்னும் வேட்பாளர் முடிவு செய்யப்படவில்லை.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துடன் கே.எஸ். அழகிரி மல்லுக்கு நிற்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.. எனினும் காங்கிரஸ் தலைமை  ப.சிதம்பரத்திற்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல்  அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டு  வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடர் குழப்பம் நிலவி வருகிறது