ராணுவத்தில் 5 ஜி தொழில்நுட்பம் - சோதனை நடத்த மத்திய அரசு முடிவு!

இந்திய ராணுவத்தில் 5 ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சோதனை மத்திய பிரதேசத்தில் உள்ள ராணுவ கல்லூரியில் நடத்தப்பட உள்ளது.

ராணுவத்தில் 5 ஜி தொழில்நுட்பம் - சோதனை நடத்த மத்திய அரசு முடிவு!

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் இணைய பயன்பாட்டாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் ஜூலை மாதத்திற்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இராணுவத்தில் 5 ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சோதனை மத்திய பிரதேசத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தும் வகையில்லும் குறிப்பாக எல்லைகளில் கண்காணிப்பு பணிகளில் 5 ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான சோதனையை மத்திய பிரதேசத்தில் உள்ள  ராணுவ தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எம்சிடிஇ - ஐஐடி இடையே கடந்த திங்கட்கிழமை கையெழுத்தானது.