6 வயது சிறுமி பிரதமர் மோடியிடம் புகார்..... பதிலளித்த பி.எம் ஆபீஸ்

ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி, தனக்கு நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுவதாகப் பிரதமர் மோடியிடம் புகார் அளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

6 வயது சிறுமி பிரதமர் மோடியிடம் புகார்..... பதிலளித்த பி.எம் ஆபீஸ்

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிதீவிரமடைந்து வரும் வேளையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறபித்து உள்ளது. 

இதனால் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களின் படிப்புகளை ஆன்லைன் மூலம் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் ஆறு வயது சிறுமி நீண்ட நேரம் நீடிக்கும் ஆன்லைன் வகுப்புகளால் சோர்ந்து போயுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் அளிக்க முடிவு செய்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.


சிறுமி வெளியிட்டுள்ள வீடியோவில், "தனது ஆன்லைன் வகுப்பானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு முடிவடைகிறது. ஆங்கிலம், கணிதம், உருது, ஈவிஎஸ் மற்றும் கணினி ஆகிய வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. குழந்தைகளுக்கும் நிறைய வேலை இருக்கிறது" என்று கைசைகைகளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் சிறுமி எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் காட்டுகிறார்.

மேலும், "சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும்" என தன்னுடைய மழலை மொழியில் கேள்வி கேட்டுவிட்டு, "என்ன செய்ய முடியும் மோடி சார்" என கூறிவிட்டு 'பை' சொல்லிவிட்டு முடிகிறது அந்த வீடியோ.

தற்போது, இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதை 57,000 பேர் பார்த்துள்ளனர், 5,000 லைக்ஸ்கள் விழுந்துள்ளன. 1,200 பேர் ரீட்விட் செய்தது மட்டுமில்லாமல், சிறுமியின் புகாருக்குப் பதிலளித்துள்ளனர்.