இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது-அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கைகளால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார மந்தநிலை கட்டுக்குள் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். 

இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது-அமித் ஷா

சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்களின் 6வது தேசிய மாநாடு:

இலங்கை, பாகிஸ்தான், மற்ற அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்  விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டில் உள்ளது எனவும்  மற்ற நாடுகளில் விலைவாசி உயர்ந்து கொண்டு செல்வதை யும்பார்க்க முடிகிறது என அமித் ஷா 6 வது தேசிய சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.

மேலும் கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு இன்றும் பல நாடுகள்  பொருளாதாரத் தாக்கத்தை  உணர்ந்து வருகின்றன எனவும் ஆனால் இந்தியாவில் விலை உயர்வு மற்றும் பொருளாதார மந்தநிலை இருந்தாலும் அது கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். சரக்கு மற்றும் சேவை வரியை  "கப்பர் சிங் வரி" என்று தொடர்ந்து குறிப்பிடுபவர்கள் இன்றைய நிலவரப்படி, ஜிஎஸ்டி வசூல் ₹1.62 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தியைத அமித் ஷா தாக்கி பேசியுள்ளதாகவும் தெரிகிறது.

நிலக்கரி தொகுதிகள் ஏலம்:

நிலக்கரி இறக்குமதியை குறைக்க, 50% நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நிலக்கரிச் சுரங்கங்கள் முன்பு ஒதுக்கப்படடுவதையும் இங்கு சுட்டிக்காட்டினார். ஒதுக்கீடுகள் காரணமாக அதிக அளவில் ஊழல் நடைபெற்றதாகவும், கனிமங்கள் நாட்டின் வளங்கள், நாட்டின் வளர்ச்சிக்காக அவை ஏலம் விடப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். கனிமத் தொழில் வளங்களை வருவாய் ஈட்டும் மாதிரியாக மட்டும் பார்க்கக் கூடாது எனவும் 2014 ஆம் ஆண்டில் பல நீதிமன்ற வழக்குகள் இருந்ததாகவும் கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், மத்திய விஜிலென்ஸ் கமிஷன் ஆகியோரால் பல கேள்விகள் எழுப்பபட்டதைத் தொடர்ந்து  இதுபோன்ற  ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததாகவும் குறிப்பிட்டார்.

விரும்பும் அளவுக்கு கனிமத்தை பிரித்தெடுக்க அரசாங்கம்  ஊக்குவிக்கும் எனவும் ஆனால் தாதுக்களை ஏற்றுமதி செய்வது மட்டுமே நாட்டிற்கு பயனளிக்காது எனவும் அதை உள்நாட்டிலேயே பயன்படுத்தி, இறுதி தயாரிப்பு மட்டுமே வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.