அக்னிபத் திட்டத்தை எதிர்த்த வழக்கு :  உச்சநீதிமன்றம் ஒப்புதல்??

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்த வழக்கை அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

அக்னிபத் திட்டத்தை எதிர்த்த வழக்கு :  உச்சநீதிமன்றம் ஒப்புதல்??

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் இளைஞர்களுக்கு பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தை கடந்த மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் சாலையில் டயர்களுக்கு தீ வைத்தும், ரயில் பெட்டிகளை தீயிட்டு கொளுத்தியும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து திட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இப்பணிக்காக காத்திருக்கும் நிலையில், 4 ஆண்டுகளுக்கு மட்டும் வேலை வழங்குவது ஏற்புடையது அல்ல என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வார விடுமுறைக்குப் பின் அக்னிபாத் திட்டம் ரத்து தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.