திருமண நிகழ்ச்சியில் வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர்..! 4 பெண்கள் பலி..!

காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை..!

திருமண நிகழ்ச்சியில் வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர்..! 4 பெண்கள் பலி..!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் திருமண நிகழ்ச்சியின் போது கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள விக்ரம்பூர் என்ற கிராமத்தில் நேற்று நடைபெற்ற திருமணத்தின் போது, சமையல் கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனை சரிவர கவனிக்காத நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்து பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதனால் மண்டபத்தில் இருந்து பொதுமக்கள் அலறிஅடித்துக் கொண்டு வெளியேறினர். இந்த விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்த நிலையில், தகலவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த பெண்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.