ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டாலே டெல்டா கொரோனாவை விரட்டலாம்..!!?

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே, டெல்டா வகை கொரோனா தொற்றுக்கு எதிராக நன்றாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே ஒரே தீர்வு எனக் கூறப்படுவதால், பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் கொரோனா ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டால், டெல்டா வகை கொரோனா தாக்காமல் பாதுகாப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே, டெல்டா வகை கொரோனா தொற்றுக்கு எதிராக நன்றாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.