பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம்.. 19 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பதாக தகவல்!!

பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம்.. 19 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பதாக தகவல்!!

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச கன்வென்சன் ஹாலில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜகவைச் சேர்ந்த 19 மாநில முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய பாஜக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

தேசிய செயற்குழுவை முன்னிட்டு, ஹைதராபாத் நகரம் முழுவதும், காவிக்கொடியும், பாஜகவின் சாதனைகளை விளக்கும் போஸ்டர்களும் ஆக்கிரமித்துள்ளன.

இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தைத் தொடர்ந்து, தேசிய செயலாளர்கள் மற்றும் தேசிய பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பலத்தை அதிகரிப்பதே இந்த செயற்குழுவின் முக்கிய நோக்கம் எனக் கூறப்படுகிறது. அதேபோல், நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத் நகரில் நடக்க உள்ளதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.