திருமணத்தில் ரசகுல்லாவிற்கு ஏற்பட்ட சண்டையில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..!

திருமணத்தில் ரசகுல்லாவிற்கு ஏற்பட்ட சண்டையில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..!

திருமணங்களில் பிரச்னை:

பொதுவாகவே திருமணம் என்றால் நிச்சயம் பிரச்னை இல்லாமல் இருக்காது. திருமண பத்திரிக்கையில் பெயர் விடுபட்டதில் இருந்து, விருந்து பரிமாறும் போது கறி குறைவாக வைப்பது வரை எப்போது பிரச்னை தகராறு அடிதடி கிளம்பும் என்பது யாருக்கும் தெரியாது. 

ரசகுல்லாவிற்கு சண்டை:

ஆனால் இங்கு நடைபெற்றிருக்கும் சண்டை ரசகுல்லாவுக்காக. ஆச்சர்யமாக இருக்கின்றதா? அது தான் உண்மை. உத்தரப்பிரதேசத்தில் ரசகுல்லாவுக்காக ஏற்பட்ட சண்டையில் 20 வயது இளைஞன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

குறைவாக பரிமாறப்பட்டதால் ஆத்திரம்:

எட்மத்பூர் பகுதியில் ஜேவத் மற்றும் ரஷீத் ஆகிய சகோதரர்களுக்கு ஒன்றாக திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியை அடுத்து தயார் செய்யப்பட்ட விருந்தில், ரசகுல்லா குறைவாக பரிமாறப்பட்டதாகத் தெரிகிறது. 

இளைஞர் ஒருவர் உயிரிழப்பு:

அப்போது பெண் வீட்டாருக்கும் மணமகன் வீட்டாருக்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவரை மாறி ஒருவர் கத்தியால் தாக்கத் தொடங்கினர். இதில் சன்னி என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.