மக்களின் ஆதரவு இருக்கும்வரை ஆம் ஆத்மியை அழிக்க முடியாது... அரவிந்த் கெஜ்ரிவால்!!!

மக்களின் ஆதரவு இருக்கும்வரை ஆம் ஆத்மியை அழிக்க முடியாது... அரவிந்த் கெஜ்ரிவால்!!!

மக்களின் ஆதரவு இருக்கும் வரை ஆம் ஆத்மி கட்சியை அழிக்க முடியாது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நடந்துவரும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  சிபிஐ இதுகுறித்து விசாரித்து வருகிறது.   இந்த நிலையில், மோசடியில் தொடர்பு இருப்பதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.  இது நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முறைகேடு குறித்து பதிலளிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.  

அதன்பேரில் நேற்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர் ஆனார்.  அவரிடம் 9 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  அப்போது மதுபானக் கொள்கை ஊழல் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.  விசாரணை முடிந்து இரவு 9 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார். 

விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.  அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால், சிபிஐ அதிகாரிகள் தன்னிடம் ஒன்பதரை மணி நேரம் விசாரணை நடத்தியதாக தெரிவித்தார்.  அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தான் பதிலளித்ததாகவும், மதுபான கொள்கை முறைகேடு என்பது பொய்யான வழக்கு என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.  

மேலும், ஆம் ஆத்மி கட்சியை அழிக்கப் பார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், மக்களின் ஆதரவு இருக்கும்வரை ஆம் ஆத்மியை அழிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:    சிறுபான்மையினர் மக்களை ஏமாற்றும் கட்சி அதிமுக அல்ல... இபிஎஸ்!!