கிழக்கு எல்லையில் ரபேல் விமானங்கள்... இந்திய விமானப்படை முடிவு...

சீனாவுடனான கிழக்கு எல்லைக்கு அருகே ரபேல் போர் விமானங்களை நிலைநிறுத்த விமானப் படை முடிவு செய்துள்ளது. 

கிழக்கு எல்லையில் ரபேல் விமானங்கள்... இந்திய விமானப்படை முடிவு...
பிரான்சிடம் இருந்து 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2019ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இவற்றில் ரபேல் 23 போர் விமானங்கள் தற்போது வரை இந்தியாவுக்கு வந்துள்ளன.
 
இதில், முதலாவது தொகுப்பில் வந்தடைந்த ரபேல் போர் விமானங்கள், பாகிஸ்தானின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப் படைத் தளத்துடன் இணைக்கப்பட்டன.
 
இந்த நிலையில், இரண்டாவதாக, சீனாவுடனான கிழக்கு எல்லையைப் பாதுகாக்கும் வகையில் மேற்கு வங்கம் மாநிலம் ஹசிமாரா பகுதியில் ரஃபேல் போர் விமானங்களை நிலைநிறுத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.
 
கொரோனா காரணமாக இந்தப் பணிகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.