ஊதியக் குறைப்புக்கு எதிராக ஏர் இந்தியாவின் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பளக் குறைப்பைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் பொறியியல் பிரிவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.

ஊதியக் குறைப்புக்கு எதிராக ஏர் இந்தியாவின் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பளக் குறைப்பைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் பொறியியல் பிரிவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.

ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான  ஏஐஇஎஸ்எல் - இன் சேவைப்பிரிவு மற்றும் பராமரிப்பு பிரிவில் பணியாற்றும் பொறியாளர்களின் ஊதியத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்பட் டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் மற்ற ஊழியர்களின் சம்பளம் குறைக்கப் படாத நிலையில், பொறியியல் பிரிவுக்கு மட்டும் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஊழியர்களுக்கான வருமான வரி, இஎஸ்ஐ மற்றும் பிஃஎப் பணத்தை செலுத்துவதற்காக 20 சதவீத சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஊழியர்களின் சம்பளத்திலிருந்து இதற்கான தொகை பிடிக்கபட்ட நிலையில், அந்த நிதி வேறு பணிகளுக்காக மாற்றப்பட்டதாகவும், தற்போது அந்த சுமையையும் தங்கள் மீது சுமத்துவதாகவும் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் ஏர் இந்தியா நிதித்துறை இயக்குநர் ஹெஜ்மாடி மற்றும் நிதித்துறை தலைவர் கபில் அசேரி ஆகியோருக்கு எதிராக டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காவல்நிலையத்தில் நூற்றுக்கணகானோர் புகாரளித்துள்ளனர்.  டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முழு ஊதியத்தையும் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.