தடுப்பூசி போடலைன்னா, சரக்கு கிடையாது! எங்கனு தெரியுமா?

தடுப்பூசி போடலைன்னா, சரக்கு கிடையாது!  எங்கனு தெரியுமா?

உத்தரபிரதேச மாநிலம் எடவாக் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மது விற்பனை செய்ய வேண்டாம் என அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எடவாக் வட்டார அதிகாரியான ஹெம் சிங், சில நாட்களுக்கு முன்பு மதுக்கடைகளில் ஆய்வு செய்துள்ளார். அப்போது, மது வாங்க நின்றிருந்த பலரும் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என கூறியுள்ளனர்.

45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டையைக் காட்டினால் மட்டுமே அவர்களுக்கு மது வழங்க வேண்டும் என மதுக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். எனினும் இது உத்தரவு அல்ல, அறுவுறித்தல் மட்டும்தான் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதேபோல, பைரோஸ்பாத் மாவட்ட நிர்வாகம், அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே இந்த மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதனிடையே உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட வந்தவர்களைப் பார்த்து விஷ ஊசி போட வருகிறார்கள் என நினைத்து ஒருவர் சரயு நதியில் குதித்து தப்பித்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.