”குஜராத்தை போன்று அனைத்து மாநிலங்களும்...” பிரதமர் மோடி!!

”குஜராத்தை போன்று அனைத்து மாநிலங்களும்...” பிரதமர் மோடி!!

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 

தேர்தல் பிரச்சாரம்:

குஜராத் சட்டமன்றத் தேர்தலையொட்டி குஜராத் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  அதன்படி, பாவ்நகர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார் பிரதமர்.

குஜராத்தைப் போன்று:

குஜராத் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பைப் போன்று நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இருக்க வேண்டுமென்று மக்கள் விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும், 20 ஆண்டுகளாக மேற்கொண்ட தவம் மற்றும் நம்பிக்கை காரணமாக குஜராத்தின் இடைவிடாத வளர்ச்சிப் பயணம்  நீடிப்பதாக கூறினார்.

முதல் 5 இடங்களுக்குள்:

முன்னதாக, வதோதராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், சூரியசக்தி மின் உற்பத்தியில் உலகின் முதல் ஐந்து இடங்களுக்குள் இந்தியா முன்னேறியுள்ளதாகவும் மின் மிகை மாநிலமாக குஜராத் திகழ்வதாகவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு:

தாஹோத் எனும் இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர், 75 ஆண்டுகளாக குடியரசுத் தலைவர் பதவிக்கு பழங்குடியினத்தவர்கள் தகுதியற்றவர்களாக காங்கிரஸ் கட்சியினர் கருதி வந்ததாக குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க:   இந்தியாவில் தொடரும் நிலநடுக்கங்கள்!!!