கர்நாடக அரசு கொடி டிசைனில் உள்ளாடைகள்... அதுவும் ஸ்பெஷல் ஆஃபர்ல!! ஆசிங்கப்படுத்திய அமேஸான்!

கர்நாடக அரசு கொடியின் கலரில் பிகினி உடை அதாவது உள்ளாடைகளை விற்பனை செய்த அமேஸான் நிறுவனத்த்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக அரசு கொடி டிசைனில் உள்ளாடைகள்... அதுவும் ஸ்பெஷல் ஆஃபர்ல!! ஆசிங்கப்படுத்திய அமேஸான்!
கூகுள் சமீபத்தில் கன்னட மக்களை அவமதிக்கும் விதமாக உலகிலேயே மிகவும் அசிங்கமான மொழி கன்னடா தான் என கூகுள் சர்ச்சில் வந்தது. அந்த வடு இன்னும் மறைவதற்குள் அமேஸான் கன்னட கொடியின் கலர் மற்றும் டிசைனில் பெண்களுக்கான நீச்சல் உடைகளை விற்பனை செய்து வந்துள்ளது கர்நாடக அமைப்பை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
பிரபல இ- வணிக நிறுவனமான அமேஸான் கர்நாடக அரசு கொடியை வைத்து புதிய ரக பிகினி உடைகள், உள்ளாடைகள் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்திருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அமேஸான் கனடா இணையத்தளம் இந்த நீச்சல் உடைகளை விற்பனைக்கு விட்டுள்ளது.
 
இந்த நீச்சல் உடைகள் கர்நாடக அரசு கொடி டிசைனில் வடிவமைக்கப்பட்டு, கலரும் அதே நிறத்தில் இருக்கிறது. இது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வரும் இந்த உள்ளாடைகள் கனடா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் மெக்ஸிக்கோ போன்ற நாடுகளிலும் அமேஸானில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.  
 
அமேஸானின் விற்பனைக்கு வந்துள்ளதால் கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மேலும், அமேஸான் நிறுவனத்தில் ஷாப்பிங் செய்வதை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கர்நாடகா ரக்‌ஷனா வேதிகா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
இது தொடர்பாக அவர் பெங்களூரில் போராட்டத்திலும் ஈடுபட்டார். போராட்டத்தின்போது கர்நாடகா ரக்‌ஷனா வேதிகாவைச் சேர்ந்த பிரவீன் ஷெட்டி அளித்த பேட்டியில், கர்நாடகா கொடி பல கோடி கன்னட மக்களின் பிணைப்பாக இருக்கிறது. உலகம் முழுவதும் வாழும் கன்னட மக்களின் உணர்வுகளை அமேஸான் அவமதித்துவிட்டது என்று தெரிவித்தார்.