பிரதமர் முன் தீடிரென வந்த ஆம்புலன்ஸ்..! குஜராத்தில் நெகிழ்ச்சி..!

பிரதமர் முன் தீடிரென வந்த ஆம்புலன்ஸ்..! குஜராத்தில் நெகிழ்ச்சி..!

பிரதமர் மோடி நேற்று குஜராத்தில் பிரமாண்ட பேரணி நடத்திய நிலையில், நெகிழ்ச்சியுட்டும் நிகழ்வு ஒன்றும் நடந்துள்ளது.

குஜராத் தேர்தல்:

குஜராத் சட்டபேரவைக்கு நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் டிசம்பர் 5 ஆம் தேதி இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக் 89 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 60 % வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Image

குஜராத்தில் பாஜக:

குஜராத் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலம் மற்றும் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக தான் குஜராத்தை ஆண்டு வருகிறது. இந்த தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது பாஜக. மேலும் தேர்தல் அறிக்கையுலும் பாஜக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது.

Image

தேர்தல் பிரச்சாரம்:

டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக டிசம்பர் 3 ஆம் தேதிவரை பிரச்சாரம் செய்ய அனுமதி உள்ளது. நேற்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், நேற்று மாலையே அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார் பிரதமர் மோடி. சாலை மார்க்கமாக மக்களை சந்திக்கும் பேரணியை பிரதமர் மோடி மேற்கொண்டார்.

இதையும் படிக்க: வென்றும் வெளியேறிய ஜெர்மனி..! கதறியழுத பெல்ஜியம் ரசிகர்கள்..! 36 ஆண்டுகளுக்கு பின் சாதனை..!

முதல் முறை:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாலை 5 மணியளவில் தொடங்கிய இந்த பேரணி, இரவு 9.45 மணி வரை நடைபெற்றது. இதற்காக அங்குப் பலத்த காவல் பாதுகாப்பும் செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடி சுமார் 50 கிமீ சாலை மார்க்கமாக பயணித்து பொதுமக்களைச் சந்தித்தார். பிரதமர் மோடி இவ்வளவு சாலை பேரணியில் ஷோவில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். 

வீடியோ

தீடிரென வந்த ஆம்புலஸ்:

பிரதமர் மோடி பேரணியில் சென்று கொண்டிருக்கும் போது, அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. ஆம்புலன்ஸ் வாகனம் பிரதமர் மோடியின் வாகனத்திற்குப் பின்னால் வருவதை பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் கவனித்தனர். இதையடுத்து பிரதமர் சென்று கொண்டிருந்த வாகனம், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு, அந்த ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல பாதுகாப்புப் படையினர் ஏற்பாடு செய்து தந்தனர். இதனால் பிரதமர் மோடி சென்றுகொண்டிருந்த வாகனம் மக்கள வெள்ளமாக திரண்டிருந்த சாலையில் சில நொடிகள் நிறுத்தப்பட்டன. அந்த ஆம்புலன்ஸ் வாகனம் சென்ற பிறகு பிரதமர் மோடி தனது பேரணியைத் தொடர்ந்தார். 

மோடி

பாராட்டு:

இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடியின் இந்த செயலை அவர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பிரமதர் மோடியின் கான்வாய் ஆம்புலன்ஸுக்காக நிறுத்தப்படுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, மோடி குஜராத் சென்ற போது, இரு முறை வாகனம் நிறுத்தப்பட்டு வழி விட்டது குறிப்பிடத்தக்கது.