தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.2,555 கோடி வருவாய்...?

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு 2 ,555 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.2,555 கோடி வருவாய்...?

கடந்த 2017-18 காலகட்டத்தில் தான் இந்த தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் தனிநபரோ, நிறுவனமோ அல்லது கூட்டமைப்போ கட்சிகளுக்கு நன்கொடை வழங்க முடியும்.

அதன்படி, கடந்த 2019 முதல் 20 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் பாஜக 2,555 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது முந்தைய ஆண்டு நிதியான ஆயிரத்து 450 கோடியுடன் ஒப்பிடுகையில் 75 சதவீதம் அதிகமாகும். இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி 383 கோடி ரூபாயை மட்டுமே நன்கொடையாக ஈட்டியுள்ளது.

மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, 100 கோடியும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 29 கோடியும், சிவசேனா 41 கோடியும், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 2 கோடியும், அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 18 கோடியும் நன்கொடையாகப் பெற்றுள்ளன.